பொதுவாக சிலர் அடிக்கடி வெயிலில் செல்வதனால் முகம் வறண்டு அழுக்குகள் நிறைந்து காணப்படும். இதற்காக பியூட்டி பாலர்களுக்கு செல்லவேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் காபியை கொண்டு இதனை சரி செய்ய முடியும்.
காபித்தூளை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும். அதுமட்டுமின்றி சருமத்தை இறுக செய்யும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கம், சூரிய கதிரால் ஏற்பட்ட கருமை நிறம் ஆகியவை அகன்று முகத்தை ஜொலிக்க செய்யும்.
காபி பொடியும் கற்றாழை சாறும்
காபி பொடியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து கற்றாழை ஜெல்லை கலந்து குழைத்து கொள்ளவும். பிறகு முகத்தில் மசாஜ் செய்யவும். முகத்தின் அனைத்து இடங்களிலும் நன்றாக பரவும் படி தேய்த்து மசாஜ் செய்து 15 நிமிடங்கள் ஊறவிடவும். பிறகு மிதமான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.
தேனும் காபிபொடியும்
பாலை காய்ச்சாமல் காபி பொடியை கலந்து பிறகு சிறிதாக சிறிதாக தேன் கலந்து குழைத்துகொள்ளவும். அதை முகத்திலிருந்து மேல் நோக்கி முகத்தில் தடவி கொள்ளவும். முகம், கழுத்து, கை, கால் என உடல் முழுக்கவே இதை தடவி கொள்ளலாம். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளலாம். இப்படி செய்தால் சருமத்தில் மினுமினுப்பை வர செய்யலாம்.தேன் முகத்தை பளபளவென்று வைத்திருக்கும். மென்மையாகவும் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
காபிபொடியும் கசகசாவும்
கசகசாவை 3 மணி நேரம் முன்கூட்டியே ஊறவைத்து மிக்ஸியில் மைய அரைத்து கூடவே காபிபொடியும் கலந்து பால் சேர்த்து அரைத்து கொள்ளவேண்டும்.
இதை முகத்தில் இலேசாக ஸ்க்ரப் செய்தால் முகத்தின் கருமை நிறம் மறைந்து வெள்ளையாக மாறும். கசகசா முகத்தின் சுருக்கங்களை போக்கும். கருமை நிறத்தை மாற்றும். காபி பொடி இறுக்கி பிடிக்கும் போது சருமம் வயதாவது போன்ற தோற்றத்தையும் தடுக்கிறது.
Comments